×

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்; ட்விட்டர் இயக்குனருக்கு சம்மன்: காசியாபாத் போலீஸ் நடவடிக்கை

காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் முஸ்லிம் முதியவரின் தாடியை அகற்றி, அவரை ‘வந்தே மாதரம்’,‘ஜெய் ராம்’ என்று கூறச்சொல்லி ஒரு கும்பல் தாக்குவதுபோன்ற வீடியோ, ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அது போலியான வீடியோ என்று சொல்லி, அதை அகற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், டுவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை அகற்றவில்லை. முன்னதாக மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, ட்விட்டர் நிறுனம் அதன் சட்ட பாதுகாப்பை இழந்தது. . இந்நிலையில், காசியாபாத் முதியவர் விவகாரத்தில் போலி வீடியோ பதிவை அகற்றாமல், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்ததாக கூறி ‘டுவிட்டர்’ நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், போலி வீடியோவை வெளியிட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநருக்கு  காசியாபாத் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில்,  7 நாட்களுக்குள்  லோனி பார்டர் காவல் நிலையத்திற்கு நேரில்  வந்து தனது தரப்பு வாதத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்; ட்விட்டர் இயக்குனருக்கு சம்மன்: காசியாபாத் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Twitter ,Ghaziabad ,Ghaziabad, Uttar Pradesh ,Vande Mataram ,Jai ram ,Dinakaran ,
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...