×

சதுப்புநில பாதுகாப்பு உடன்பாட்டில் தமிழகத்தில் பழவேற்காடு ஏரி உள்ளிட்ட 10 இடங்களை சேர்க்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ராம்சார் தளங்கள் பட்டியலில், தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பழவேற்காடு ஏரி உள்ளிட்ட மேலும் 10 இடங்களையும்  சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஈர நில பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், வரவேற்கத்தக்க நடவடிக்கையும் ஆகும்.

ஈர நிலங்கள் இயக்கத்தை கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஆணையமாக மாற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளை வகுத்து, இனியும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டும். ராம்சார் தளங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பழவேற்காடு ஏரி உள்ளிட்ட மேலும் 10 இடங்களையும் அப்பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

Tags : Palavekadu lake ,Tamil Nadu ,Anbumani , Mangrove Conservation, Tamil Nadu, Palavekadu Lake, Anbumani Emphasis
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...