பிளஸ் 1 மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன் கைது: கோவை அருகே பரபரப்பு

கோவை: பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாக நடித்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படித்தபோது சக மாணவர் ஒருவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. அந்த மாணவர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். அவர் மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. மாணவியை அவர் காதலிப்பதாக கூறி நெருக்கம் காட்டினார்.

ஒரு முறை அவர் மாணவியிடம் பேச வேண்டும் எனக்கூறி வீடியோ காலில் அழைத்தார். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நிற்க வைத்தார். பின்னர் அவருக்கு தெரியாமல் நிர்வாண காட்சியை ‘ஸ்கிரீன்  ஷாட்’ எடுத்தார். இதை காட்டி மாணவியிடம் அடிக்கடி அவர் வரம்பு மீறி பேசியுள்ளார். மீண்டும் வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் தர சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே, ஆத்திரம் அடைந்த சிறுவன், ‘‘ஏற்கனவே நீ நிர்வாணமாக நின்றதை பதிவு செய்து வைத்துள்ளேன். நான் சொன்னபடி கேட்காவிட்டால் அந்த பதிவை உன் பெற்றோருக்கு அனுப்பி விடுவேன்’’ என கூறி மிரட்டினார். ஆனால், அவர் கூறியதை சிறுமி நம்பவில்லை. அடுத்த சில நொடிகளில் அந்த சிறுவன் நிர்வாண போட்டோக்களை சிறுமியின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், தான் சொன்னபடி செய்யாவிட்டால் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் பரவி விடும் என எச்சரித்தார். இதில் மாணவி அதிர்ச்சி அடைந்து, பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதைத்தொடர்ந்து பெற்றோர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அந்த சிறுவனை  கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: