×

அரியலூர், பெரம்பலூரில் 15 மணி நேர சோதனை நிறைவு அதிகாரி வீட்டில் 1 கிலோ தங்கம் ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல்

அரியலூர்: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநரின் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 15 மணி நேர சோதனையில் ஒரு கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி, ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் முனியப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ்(58). புதுக்கோட்டையில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநராக பணியாற்றி வரும் இவர், அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின்பேரில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அரியலூரில் உள்ள தன்ராஜ் வீட்டுக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அவருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், திருமண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள மற்றொரு வீடு, பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது மற்ற 2 வீடுகள் என 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து இடங்களிலும் நடந்த இந்த சோதனை நேற்றுமுன்தினம் இரவு 10 மணியவில் நிறைவடைந்தது. 15 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முனியப்பர் கோயில் ெதரு வீட்டில் இருந்து ஒரு கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி‌எஸ்‌பி சந்திரசேகரின் கூறுகையில், அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்று தன்ராஜிடம் கூறியுள்ளோம் என்றார்.

Tags : Ariyalur ,Perambalur , Completion of test, officer, confiscation
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...