×

பெண்களுக்கு சசிகலா அறிவுரை

சென்னை: பெண்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மன தைரியத்தாலும், தன்னம்பிக்கையாலும் தான் அரசியல் ஆசனத்தில் அமர்ந்தார்  ஜெயலலிதா. நாங்கள் எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு பொறுமையோடு போராடித் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கிறோம்.  ஒரு பெண்ணாக இவை அனைத்தையும் சமாளித்து இன்றைக்கு உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

யாராக இருந்தாலும் தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வு ஆகாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிரச்னையில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை மட்டும் சிந்தியுங்கள். தன்னம்பிக்கையை இழந்துவிடாமல் செயல்பட்டால் போதும் கண்டிப்பாக நாம் எந்த பிரச்னைகளில் இருந்தும் விடுபட முடியும்.

Tags : Sasikala , Women, Sasikala, advice
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!