×

19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் 19 எம்பிக்களை நீக்கம் செய்திருப்பது ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  மாநிலங்களவையில், மக்கள் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், ஆளும் பாஜ அரசு கூட்டத் தொடர் முழுவதும் 19 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Mutharasan , MPs suspended, Mutharasan condemned
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...