×

ஐரோப்பாவுக்கு 20 சதவீத காஸ் சப்ளையை குறைத்தது ரஷ்யா

பெர்லின்: ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு அளவில் 20 சதவீதத்தை ரஷ்யா குறைத்து  உள்ளது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய குழாய் வழியாக (நார்ட் ஸ்ட்ரீம் 1) இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனம் செய்து வருகிறது. உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையேயான போரால், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்த ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை மட்டும் நிறுத்தவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நிறுவனம், ஐரோப்பாவுக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் எரிவாயுவின் அளவை 20 சதவீதத்தை குறைத்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எரிவாயு அளவு குறைக்கப்பட்டதாக ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ஆனால், போருக்கு மத்தியில் எரிவாயு விலையை உயர்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை என்று ஜெர்மனி குற்றம்சாட்டி உள்ளது. இந்த எரிவாயு குறைப்பை உறுதிப்படுத்திய ஜெர்மனியின் இணையதள ஆணைய தலைவரான கிளாஸ் முல்லர், ‘எரிவாயு இப்போது ரஷ்ய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி மற்றும் ரஷ்ய போர் உத்தியின் ஒரு பகுதியாகும்’ என்றார். ரஷ்யாவின் எரிவாயு குறைப்பால் 27 நாடுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


Tags : Russia ,Europe , Russia cuts gas supply to Europe by 20 percent
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!