×

பத்மநாபசுவாமி கோயில் கோபுரத்தில் ஏற அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலும் ஒன்று. சில வருடங்களுக்கு முன் இதில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்ப்பதற்கு பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொக்கிஷங்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு வரை கோயிலின் 7 கோபுரங்களிலும் ஏறி சுற்றிப் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக  தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோபுரத்தில் பக்தர்களை மீண்டும் அனுமதிக்க கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக முதல் மூன்று அடுக்குகளில் மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : Padmanabhaswamy temple tower , Permission to climb the Padmanabhaswamy temple tower
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...