இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 6 பேர் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த 6 பேரை மரைன் போலீசார் மீட்டு, மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தமிழகம் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர், நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்தனர்.

நேற்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கிய அவர்களை, மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இலங்கையில் எந்த வேலையும் கிடைக்காமல், உணவுக்கே கஷ்டமாக இருந்ததால் தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களது உடமைகளை சோதனை செய்த மரைன் போலீசார், விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: