அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் மோடி நாளை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில் குறிப்பாக காந்தி மண்டபம் சாலை, கான்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே விமான நிலையம் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: