அமலாக்கத்துறையை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சத்யாகிரக போராட்டம்

பெரம்பூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் அழைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று முன்தினம் பெரம்பூர் வீனஸ் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் தொடர் சத்யாகிரக போராட்டம் நடந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் அகரம் கோபி, முனீஸ்வர் கணேசன், மாநில துணை தலைவர் கணபதி, மோகன் காந்தி, சர்க்கிள் தலைவர்கள் அனந்தராம், அரிபாபு, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்யாகிரக போராட்டத்தில், ‘சோனியா காந்தி மீது பொய் வழக்கு போடுவதை பாஜ அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், பழிவாங்கும் நோக்கத்துடன் பாஜ அரசு செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories: