அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட நாங்கள் விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார்; அதை நாங்கள்  விரும்பவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செஸ் போட்டி உலகளவில் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமைதான்.  ஆனால் இந்த விளையாட்டு போட்டியில் புகழ் பெற்றியிருக்கின்ற சாம்பியன்கள் இருக்கின்றார்கள். பொதுவாக  பிரதமர் ஒரு நிகழ்ச்சியிலே பங்குபெறும்போது, படங்கள் வைப்பதற்கு ஒரு ப்ரோட்டோகால் இருக்கிறது.

 அதன்படி படங்களை பிரசுரிப்பது என்பது வழக்கம். ஆனால் அவ்வாறு பிரசுரிக்கவில்லை என்றால் அது குறித்து மத்திய அரசாங்கம்தான் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜ தான் இது சம்மந்தமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. இது பாஜவுக்கும் தெரியும். பிரதமருக்கும் தெரியும். நிச்சயமாக எங்களது உட்கட்சி விவகாரத்தில் அவர் தலையிட மாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: