×

நாகையில் சலூன் கடையின் உள்பகுதியை செஸ் பலகையாக மாற்றி இளைஞர் நூதன விழிப்புணர்வு..!!

நாகை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சலூன் கடையை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது கடையையே செஸ் பலகையாக மாற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஓரடியம்புலம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில்குமார். மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டியை கருத்தில் கொண்டு தனது சலூன் கடையையே ரூ.20 ஆயிரம் கொண்டு செலவு செய்து செஸ் பலகை வடிவில் வண்ணம் தீட்டி, பலருக்கும் அந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

செஸ் விளையாடுவதால் மூலம் இளைஞர்களுக்கு அறிவுக் கூர்மையும், சிந்தனை ஆற்றலும் பெருகும் எனவும் அவர் கூறுகிறார். இந்த விளையாட்டில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர் நாளை மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி தனது கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்த உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். செஸ் விளையாட்டு மீதான செந்தில்குமாரின் ஆர்வத்தையும், மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அங்குள்ள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.


Tags : Nagai , Nagai, salon shop, interior, chess board, youth, awareness
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு