சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம்; ஊழல் செய்யாத போது, பயம் எதற்கு?.. ஒன்றிய அமைச்சர் கேள்வி

டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்பாடையது அல்ல என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துக்கர். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும், அமலாக்கத்துறை சார்பில் தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் பங்குதாரரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணையை முடித்துள்ளனர்.

மற்றொரு பங்குதாரரான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளான இன்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இருந்தும் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள், கட்சியினரை போலீசார் தடுத்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்காமல் மாநில முதல்வர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்பாடையது அல்ல. ஊழல் செய்யாத போது பயம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; விளையாட்டுத்துறையில் மகளிர் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: