×

காரியாபட்டி அருகே சூறாவளிக்கு வாழை சாகுபடி நாசம்-நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு தோட்டங்களிலிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து சேதமடைகின்றன.விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, பப்பாளி மரக்கன்றுகள் சூறாவளி காற்றுக்கு சாய்ந்து சேதமடைகின்றன.

இந்நிலையில், ஆவியூரைச் சேர்ந்த விவசாயி பரமசிவம் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வாழைகள் வளர்ந்து குழை தள்ளக்கூடிய நிலையில், நேற்று முன்தினம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து முற்றிலும் சேதமானது. இதேபோல, பல விவசாயிகளின் விளைநிலங்களில் வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. பப்பாளி மரங்களும் சாய்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு சிலர் கீழே சாய்ந்த வாழை மரங்களை தூக்கி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை நம்பி வாழும் நிலையில், இயற்கை சீற்றத்தால் விவசாயம் பாதித்திருப்பது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Gariyapatti , Kariyapatti: In Kariyapatti area, bananas in the gardens were damaged due to the rains and cyclone winds.
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...