×

10 ஆண்டுகளுக்கு பிறகு தொப்புள்நாயக்கன்குளம் தூர்வாரப்பட்டது-ஸ்ரீராமபுரம் விவசாயிகள் வரவேற்பு

சின்னாளபட்டி :  ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு  தொப்புள்நாயக்கன்குளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தூர்வாரப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நீர்நிலைகளை பாதுகாக்கும் வண்ணம் நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் சகிலாராஜா, செயல் அலுவலர் விஜயா தலைமையில், துணை தலைவர் முருகேசன் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் பேரூராட்சியின் நீர் ஆதாரமான தொப்புள்நாயக்கன்குளம் தூர்வாரப்பட்டது. குளத்தில் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தால் தண்ணீர் குளத்திற்கு வரும்படி பணிகள் செய்யப்பட்டது. இதுபோல பெரியகோம்பை வரத்து வாய்க்கால்கள் மற்றும் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டது. தூர்வாரும் பணியில்  பேரூர் கழக செயலாளர் ராஜா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Napelnayakkunkulam ,Sriramapuram , Chinnalapatti: After 10 years in Sriramapuram municipality, Doppulanayakankulam was removed on behalf of the municipal administration.
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...