×

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் உடல்நிலை அடிப்படையில் விசா காலம் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு : சிங்கப்பூர் அரசு

கொழும்பு:  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை சிங்கப்பூர் அரசு மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். கடந்த 9ம் தேதி போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால்,, அதிபர் மாளிகை, அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால், உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்து, அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அபயம் அளிக்க மறுத்துவிட்ட சிங்கப்பூர் அரசு, தற்காலிகமாக தங்கும் அனுமதியை வழங்கியது. ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பியதால் அவரை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து ஓரிரு நாட்களில் கோத்தபய நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற போது, கோத்தப்பயாவிற்கு வழங்கப்பட்ட குறுகியகால பயண அனுமதி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோத்தபய சார்பில் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் பயண அனுமதி நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு செல்ல ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : President ,Gotabaya Rajapaksa ,Singapore Govt. , Sri Lanka, President, Gotabaya Rajapakse, Health, Extension, Singapore Reg
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...