முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி!: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 63 கனஅடி தண்ணீர் திறப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் அருகே வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவை உயர்த்தும் நோக்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழணியில் இருந்து வடவாரி வழியாக வினாடிக்கு 2100 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.

இதனால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கடந்த 20ம் தேதி முதல் அதிக அளவு திறந்துவிடப்பட்டதால் அதன் நீர்மட்டம் முழு கொள்ளளவான 15.60 அடியை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது. 1,465 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 63 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வீராணம் ஏரியால் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Related Stories: