சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: 'ஜனநாயக படுகொலை'என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்த திமுக எம்பிக்கள்

டெல்லி: ஜனநாயக படுகொலை நாடாளுமன்றத்துக்கு வந்தனர். நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுவதால், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது.

விவாதம் நடத்தாமல் தப்பிக்க, ஆளும் பாஜ தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் தடையை மீறி பதாகை ஏந்தி எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் குரல் கொடுத்த திமுக எம்பிக்கள் 6 பேர் உட்பட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவைக்குள் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் 7வது நாளாக நேற்றும் முடங்கியது.

இந்நிலையில் இன்று ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தனர். இதனிடையே மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: