2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகம்: 2025ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை நடைபெறும் சர்வதேச மகளிர் உலகக்கோப்பை தொடர்களுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுக்கு ஒருமுறை நாடாகும் டி20 உலகக்கோப்பை தொடர் 2026-ல் இங்கிலாந்தில் நடைபெறும் என ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. 2027ம் ஆண்டில், மகளிர் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த உதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதனிடையே 2025ல் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்பத்தியாவில் நடைபெறும் எனும் ஐசிசி-யின் அறிவிப்புக்கு, பிசிசிஐ தலைவர் கங்குலி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதால் மகளிர் உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்துவோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: