×

'சென்னையில் எல்லாமே மகிழ்ச்சி தருகிறது” : ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். அந்த வரிசையில் ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ நேற்று சென்னை வந்தடைந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது. சென்னை வந்தடைந்ததும் புகாரளிக்கும் வகையில் ஏதாவது குறைபாடு இருக்குமா என்று தேடினேல் இதுவரை எல்லா ஏற்பாடுகளும் முற்றிலும் ஆச்சரியமாக உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். விரைவான குடியுரிமை சோதனை நடைபெற்றது; மாநில அரசின் ஏற்பட்டால் ஓட்டலில் அறை விரைவாக ஒதுக்கப்பட்டது. இதுவரை நான் அனுபவிக்காத விரைவான ஹோட்டல் செக் -இன் என இங்கு எல்லாமே மகிழ்ச்சி தருகிறது, என்று தெரிவித்துள்ளார்.


Tags : grandmaster ,Francisco Vallejo , Chennai, Spain, Chess Grand Master, Francisco Vallejo
× RELATED சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன்...