×

கொடிகட்டி பறக்க தொடங்கும் தங்க விலை... சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசு குறைந்து ரூ.60.00-க்கும், ஒரு கிலோ 60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இம்மாத முதல் தேதியில், ஒன்றியஅரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.37,760-க்கும், ஒரு கிராம் ரூ.4,720-க்கும் விற்பனையானது. இதனால் நகை வாங்கவே அச்சப்படும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் சென்றனர். அதன் பின் சற்றும் குறைவை காணாத தங்க விலையானது நாளுக்குநாள் உயர்வை மட்டும் சந்தித்து வரும் நிலையில், இன்றும் அதேபோல் ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை வழக்கம் போல் மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.56-க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Chennai , Chennai, Aparana Gold, Sawaran, High
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...