பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட்: இலங்கை வலுவான முன்னிலை

காலே: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்திருந்தது. 3ம் நாளான நேற்று அந்த அணி 231 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 5, பிரபாத் 3, அசிதா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 147 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கருணரத்னே 27, தனஞ்ஜெயா 30 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 323 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருக்க, இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: