×

விஐடி பல்கலை மாணவர்களுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் வேலை

சென்னை: விஐடியில் 2023ம் கல்வியாண்டின் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில் சர்வதேச பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட் டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி ஏர்.பி.என்.பி. மற்றும் மீடியா.நெட் பங்குபெற்றன. விஐடி வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திர பிரதேசம்) மற்றும் போபால் (மத்திய பிரதேசம்) மாணவ, மாணவிகளை வேலைவாய்ப்பு முகாம்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.

இதில் வேலைவாய்ப்புக்கான முதல்கட்டமாக நிறுவனத்தை பற்றிய தகவல்கள், வேலைக்கு தேவைப்படும் திறன்கள், மாணவ, மாணவியர்களுக்கு தேவையான மனித வளப் பயிற்சி நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிவுகளை விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் வெளியிட்டார்,. சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 45 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தது. அதேபோல் டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர் பி.என்.பி. மீடியா.நெட் ஆகிய நிறுவனங்களும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கின.

மோட்டார் க்யூ என்ற நிறுவனம் அமித் அகர்வால் (சிஎஸ்இ), ஷ்ரதக் பரத்வாஜ் (சிஎஸ்இ) ஆகிய 2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் சம்பளத்திற்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ச்சியாக பெரு நிறுவனங்களான அமேசான்,  டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட்,  வால்மார்ட் லேப்ஸ் போன்ற நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற உள்ளன. 184 மாணவ, மாணவிகள் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெறும்போதே வேலை வாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

பின்வரும்  பெருநிறுவனங்கள் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் -  22, டி.இ.ஷா-2, பிடிலிடி முதலீடு நிறுவனம் - 24, ஜே.பி. மோர்கன் - 82, வெல்ஸ் பார்கோ - 8, இன்போசிஸ்- 7, தி மேத் - 32 மற்றும் ஸ்னைடர் எலக்ட்ரிக் - 7. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் உள்ள வேலை வாய்ப்புகள் 175 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஷெல், ஆரக்கள்,  பிலிப்கார்ட், மேக் மை ட்ரிப்,நீல்சன் சாப்ட் லேப்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

இந்தியாவிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் விஐடி மாணவ, மாணவிகள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய தேசிய தகுதித் தேர்வில் 4630 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். முதுகலை (எம்.டெக்.(2வருடம்), எம்.டெக்.(5வருடம் சாப்ட்வேர் இன்ஜினியரிங்), எம்.சி.ஏ., மாணவ மாணவியருக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் மாதம் தொடங்கியது.  இதில் 88 பெருநிறுவன நிறுவனங்கள் 1204 மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளது. விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags : VIT University , VIT Univ., Students, Jobs
× RELATED தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம்...