×

எந்த கட்சியிலும் சேர மாட்டேன்: யஸ்வந்த் சின்கா அறிவிப்பு

கொல்கத்தா: ‘இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்,’ என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். பாஜ.வில் இருந்து பிரதமர் மோடியை எதிர்த்து வெளியேறிய முன்னாள் ஒன்றிய பாஜ அமைச்சரான யஸ்வந்த் சின்கா (84), மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அக்கட்சியில் அவர் தேசிய துணை தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். இதற்காக, கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். சின்கா தோல்வி அடைந்தார். இந்நிலையில், தனது எதிர்கால திட்டம் பற்றி சின்கா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் சுதந்திரமாக இருப்பேன். எந்த கட்சியிலும் சேர மாட்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. பொது வாழ்க்கையில் எவ்வாறு பங்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு 84 வயதாகிறது. அதனால், என்னால் எவ்வளவு காலம் சேவையாற்ற முடியும் என்பதை ஆராய்ந்து, எதிர்காலம் பற்றி முடிவு எடுப்பேன்,” என்றார்.

Tags : Yaswant Sinha , Will not join any party, Yaswant Sinha announces
× RELATED எந்த கட்சியிலும் சேர மாட்டேன்: யஸ்வந்த் சின்கா அறிவிப்பு