×

போலீசிடம் கூறிய கொள்ளை நாடகம் அம்பலம்; கள்ளத்தொடர்பு மனைவி காருக்குள் வைத்து கொலை: கணவன், வீட்டு சமையல்கார பெண் உட்பட 3 பேர் கைது

பிலாஸ்பூர்: பிலாஸ்பூரில் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை, கணவன், வீட்டு சமையல் கார பெண் மற்றும் அவரது கணவர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த தேவேந்திராவின் மனைவி தீப்தி சோனி (28). இவரை, வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டியுள்ளதால், பலோடா செல்ல வேண்டும் எனக் கூறி தனது காரில் தேவேந்திரா அழைத்து சென்றார். பின்னர், வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றார். அங்கு மறைந்திருந்த வீட்டு சமையல்கார பெண் ஷாலு மற்றும் அவரது கணவர் பிரதீப் சோனி ஆகியோர், காரில் இருந்த தீப்தி சோனியை தாக்கினர். பின்னர், தீப்தி சோனியின் கழுத்தில் கயிற்றை போட்டு நெரித்து கொன்றனர். சில நிமிடங்கள் கழித்து வந்த தேவேந்திரா, தன் மனைவி இறந்துவிட்டாரா? என்பதை உறுதி செய்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் காரில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த தீப்தி சோனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தேவேந்திராவிடம் விசாரித்த போது, தான் இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், அந்த நேரத்தில் காரில் இருந்து மனைவியிடம் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக கூறினார். அவரது புகாரை நம்பாத போலீசார், மேலும் துருவிதுருவி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீப்தி சோனியை திட்டமிட்டு அவரது கணவர் தேவேந்திரா, பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் கொலை செய்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியை கொல்வதற்காக பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலுவுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை தேவேந்திரா கொடுத்துள்ளார். ஆனால், எங்களிடம் கொள்ளை கும்பல் கொலை செய்ததாக மூவரும் கதை கூறினர். கொலைக்கான காரணம், தீப்தி சோனிக்கு பல ஆண்களுடன் கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது.அதனை பலமுறை தேவேந்திரா கண்டித்துள்ளார். ஆனால், ஆடம்பரமான உல்லாச வாழ்க்கையை வாழ்வதற்காக பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதனால், மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, வங்கிக்கு சென்று வர வேண்டும் எனக்கூறி அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் தீப்தி சோனியை கொன்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, தீப்திக்கு தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த தம்பதியருக்கு 7 வயது மகள் உள்ளார். பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறினாலும், எவரது பெயரையும் தேவேந்திரா கூறவில்லை.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். …

The post போலீசிடம் கூறிய கொள்ளை நாடகம் அம்பலம்; கள்ளத்தொடர்பு மனைவி காருக்குள் வைத்து கொலை: கணவன், வீட்டு சமையல்கார பெண் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bilaspur ,
× RELATED அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை...