போலி பணிநியமன உத்தரவு விவகாரம் திருப்பூர் டிஎஸ்பி விசாரித்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலி பணிநியமன உத்தரவை தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி திருப்பூர் டி.எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சியை சேர்ந்த குப்புசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி,  இது சம்பந்தமாக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். விசாரணைக்குப் பின், இதுகுறித்து  திருப்பூர் டி.எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: