×

திருப்பதியில் செப்.27ல் தொடக்கம் வருடாந்திர பிரமோற்சவம் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்: தேவஸ்தான அதிகாரி ஆய்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 27ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5ம்  தேதி வரை நடைபெற உள்ளது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், எஸ்பி பரமேஸ்வருடன் இணைந்து நான்கு மாடவீதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது விஜிஓ பாலிரெட்டி, உதவி பாதுகாப்பு அதிகாரிகள் சுரேந்திரா, சாய்கிரிதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Annual Pramotsavam ,Tirupati ,Devasthanam , Annual Pramotsavam security arrangements to begin at Tirupati on Sept. 27 Intensity: Inspection by Devasthanam officials
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...