ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கிய வேர்க்கடலை செடிகள்: விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் சோளிங்கரில் அதிகபட்ச மழை பதிவானது. பலத்த மழையால் வேர்க்கடலை செடிகள் தண்ணீரில் மூழ்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று பகல் மற்றும் இரவில் அதிகளவு மழை பெய்தது. சோளிங்கரில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் ெதாடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. சோளிங்கர் வெங்கட்ராயபிள்ளை ெதரு, திருத்தணி ரோடு சந்திப்பு பகுதியில் மழைநீரும், கழிவுநீரும் வெளியேறாமல் முழங்கால்  அளவுக்கு தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக கார், பைக்குகள் உள்ளிட்டவை செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மேல்வன்னியர் தெரு, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகேயும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் சோளிங்கர் சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வௌிகளில அதிகளவு தண்ணீர் தேங்கி பயிர்களை மூழ்கியது. குறிப்பாக நிலக்கடலை செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. இதில் சோளிங்கரில் அதிகபட்சமாக 107 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அரக்கோணம் 54, ஆற்காடு 22.20, காவேரிப்பாக்கம் 18, வாலாஜா 22.50, அம்மூர் 19, கலவை 18.20. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 260.90 மீட்டராகும்.

Related Stories: