கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கை: 1450 வங்கிக்கணக்குகள் முடக்கம்...! தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்

சென்னை:கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கையாக தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 1000 குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் இதனை தெரிவித்துள்ளார். கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுப்பட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு சட்ட நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 அந்த வகையில் தென்மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய தென் மண்டல காவல்துறையின் நடவடிக்கையின் படி இதுவரை 831 வழக்குகளில் 1450 வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அது சம்பந்தப்பட்ட நபர்களுடைய ரூ.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை காவல்துறை முடக்கியிருக்கிறது. குறிப்பாக இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973-ன் விதிப்படி நன்னடத்தைக்கான பிணையம் பெறப்படக்கூடிய அந்த  நடவடிக்கையை தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 10 மாவட்டங்களில் குறிப்பாக கஞ்சா கடத்துவது, போதை வஸ்துகள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 1000 நபர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடகூடாது என அந்த 1000 நபர்களிடம் முதல்கட்டமாக நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 142 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 81 பேரும், திண்டுக்கல் மாவட்டதில் 186 பேரும், தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 271 பேரிடம் இந்த பிணைய பத்திரமானது பெறப்பட்டுள்ளது. இந்த பிணையப்பத்திரத்தில் உள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் இது போன்ற குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் குற்றவாளிகள் பிணையப்பத்திர விதிமுறைகளை மீறப்பட்டதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இந்த கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 1000 பேரிடம் விசாரணை முடிவில் இன்னும் பலரிடம் இது போன்ற நன்னடத்தைக்கான பிணையப்பத்திரத்தை பெற உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: