×

30 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கி வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்கள் கவுரவிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

திருவள்ளூர்: மாமல்லபுரத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில், உலக செஸ் சாம்பியன்களான அதிபன் பாஸ்கரன், எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி, வைஷாலி, பிரக்யானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாட உள்ளனர். இதுதவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாராயண் நாத், ஷியாம் சுந்தர் மற்றும் பிரேசில் சார்பில் பிரியதர்ஷன் ஆகிய மூவரும் வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும்  துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவர்களையும் கவுரவிக்கும் விழா சென்னை, ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஒலிம்பியாட்  பயிற்சியாளர்கள் நாராயண் நாத், ஷியாம் சுந்தர், பிரியதர்ஷன் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். வேலம்மாள்  கல்வி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும் துபாயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கும் ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 44 வது செஸ் ஒலிம்பியாட் இயக்குனரும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளருமான பாரத் சிங் சவுகான், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, தொழிலதிபர் குமரவேல், பவன் சைபர்டாக் தலைமை அதிகாரி மைக் முரளிதரன், சென்னை மாவட்ட செஸ் கூட்டமைப்பின் செயலாளர் கணேசன், செஸ் பயிற்சியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Velammal ,Vidyalaya School , Honoring World Chess Champions at Velammal Vidyalaya School with Rs 30 lakh prize money; Appreciation of Minister M. Subramanian
× RELATED பஞ்செட்டி, வேலம்மாள் போதி வளாகத்தில் 16 ஆயிரம் மாணவர்கள் 21 வகை யோகாசனங்கள்