குரங்கம்மை நோய் தொற்று உலகமே எதிர்பாக்காத வேகத்தில் பரவி வருவதாக; உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி: குரங்கம்மை நோய் தொற்று உலகமே எதிர்பாக்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிப்பு செய்தியை அறிவித்துருக்கிறார். 75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில் இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தோற்று அதிகவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்திய உடன்நடியாக குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று  உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் குரங்கம்மை வைரஸ் உருமாற்றி கொண்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்புயின் இந்திய மண்டலா இயக்குனர்கள் இதனை மரவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளனர் என்று கூறிப்புட்டுள்ளார்.

குரங்கம்மை வைரஸ் பரிணாமத்தை கண்டறிய கூடுதலான ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குரங்கம்மை நோய் உடலுறவு உட்பட எவ்வித நெருக்கமான தொடர்புகள் வழியாக பரவக்கூடியது என்று  உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளார். துணிகள், படுக்கைகள், உடைகள் மூலமாக பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: