நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டம்

சென்னை: நேஷனல் ஹெரால்ட் வழக்கு சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை, விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

இதற்கு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் மாவட்ட துணைதலைவர் வி.ராகுமார், விருகை பகுதி தலைவர் கே.கே.கோபாலசுந்தரம், மாவட்ட துணை தலைவர் எஸ்.தேவதாஸ், எஸ்.சி,எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.சௌந்தர், 137 வட்ட தலைவர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.டி. சாலமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: