பழநியில் தொடருது பிளாஸ்டிக் வேட்டை 300 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்-நகராட்சி நிர்வாகம் அதிரடி

பழநி : பழநியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 300 கிலோ அளவிற்கு நகராட்சி நிர்வாகம் மீண்டும் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

 பழநி நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் பிளாஸ்டிக் விதிகள் 2016ன் கீழ் அனுமதியற்ற பிளாஸ்டிக் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பழநி நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை சுமார் 300 கிலோ  அளவிற்கு பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை விற்பனை செய்யக்கூடாதென்றும், மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

Related Stories: