×

ஸ்புட்னிக் -5 தடுப்பூசி சென்னைக்கு வந்தது?

சென்னை: ஸ்புட்னிக் -5 தடுப்பூசி சென்னைக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் மூலமாக இந்தியாவில் விற்கப்படவுள்ளது ஸ்புட்னிக் -5 தடுப்பூசி. டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் தலைமை இடமான ஐதராபாத்தில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது சென்னை உட்பட மேலும் ஒன்பது நகரங்களில் சோதனை ஓட்ட பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 18 டிகிரியில் தடுப்பூசி சேமித்து வைத்து தடுப்பூசி மையங்களுக்கு அனுப்ப முடிகிறதா?, கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய முடிகிறதா? என்பது உள்ளிட்டவை சோதித்து பார்க்கப்படும். சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் ஊழியர்களுக்கு ஓரிரு நாட்களில் ஸ்புட்னிக் வி செலுத்தப்படும். அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெல்லி, மும்பை கொல்கத்தா, பெங்களூரூ, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது….

The post ஸ்புட்னிக் -5 தடுப்பூசி சென்னைக்கு வந்தது? appeared first on Dinakaran.

Tags : chennai ,Russia ,India ,Dr. Retis Laboratories Sputnik ,Dinakaran ,
× RELATED இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்