×

திருமங்கலம் அருகே ஒரே மாதத்தில் பெயர்ந்துபோன தார் சாலை: தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

மதுரை: திருமங்கலம் அருகே 71 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார் சாலை ஒரே மாதத்தில் அப்பளம் போல் பெயர்ந்து வருவதால் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எஸ்.வெள்ளகுளம் கிராமத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் கிராம மயானத்தில் இருந்து எஸ்.கல்லுப்பட்டி வரை 1.400 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு ஒரு மாத காலமே ஆன நிலையில் அதற்குள் சாலை அப்பளம் போல் பெயர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2019-20 ஆண்டிற்கான திட்டப்பணி ஆணை இந்த தார் சாலையை கடந்த 1 மாதத்தில் முடித்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவு செய்ததாக விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ள்ளதும், கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தரமான முறையில் புதிய சாலையை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tar ,Tirumangalam , Tar road near Tirumangalam shifted in one month: Request to take action on concerned authorities..!
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...