குரங்கு அம்மை நோய் தொற்று எல்லாவித உடல் நெருக்கங்கள் மூலவும் பரவக்கூடியது : உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்!!

டெல்லி : குரங்கு அம்மை நோய் தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் இந்திய மண்டல இயக்குனர் பூனம் கேத்ராப்பால் இந்த எச்சரிப்பு செய்தியை அறிவித்துள்ளார். 75 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கு அம்மை நோய் பதிவாகாத நாடுகளிலும் பரவத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கு அம்மை தொற்று அதி வேகத்தில் பரவி வருவது உறுதியாகி இருப்பதாக பூனம் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா உடனடியாக குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் குரங்கு அம்மை வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டு இருப்பதாக கூறி இருக்கும் உலக சுகாதார அமைப்பின் இந்திய மண்டல இயக்குனர் பூனம், இதனை மரபியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். குரங்கு அம்மை வைரஸின் பரிணாமத்தை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். குரங்கு அம்மை நோய் உடல் உறவுகள் உட்பட எல்லாவித நெருக்கமான தொடர்புகள் வழியாகவும் பரவக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார். துணிகள், படுக்கைகள், மின்னணு பொருட்கள் மூலமாகவும் குரங்கு அம்மை பரவும் என்று பூனம் எச்சரித்துள்ளார்.

Related Stories: