
புதுடெல்லி: ‘தமிழக அரசின் சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லைப் பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும்’ என ஒன்றிய அரசு மாநிலங்களைவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரளா எம்பி ஜான் பிரிட்டர்ஸ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பியிருந்த கேள்வியில், ‘முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக முன்மொழிந்து உள்ளதா? அப்படி என்றால் அது தொடர்பான விவரங்கள் என்ன’ என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு, ‘தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு முன்மொழிந்து உள்ளது. முல்லைப் பெரியாறு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இரண்டு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த பகுதியில் புதிய அணை கட்ட முடியும் என தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை துறை அமைச்சகம் 2018ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை தயாரிப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
அதே சமயம் தமிழ்நாடு-கேரளா இடையே பரஸ்பர ஒப்பந்தம் என்பது சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னர் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். தன் காரணமாக தமிழக அரசின் சம்மதம் இல்லாமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு கீழே புதிய அணை கட்ட முடியாது என்பது திட்டவட்டமாக தெளிவாகியுள்ளது.