×

ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய்: உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திர - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், அனந்தேரி, கச்சூர் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது.
 
இதை சீரமைக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த வருடம் முதல் அடிக்கடி படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் 4வது கிலோ மீட்டரிலிருந்து, சேதமடைந்த கால்வாயை ஆலப்பாக்கம் 10வது கிலோ மீட்டர் வரை என 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹24 கோடி செலவில் கால்வாயை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் துவங்கியது. இதில், சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கும் பணி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டதால், கால்வாய் சீரமைப்பு பணிகள் உடனே நிறுத்தப்பட்டது.

மேலும், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 மாதம் கால்வாயில் தண்ணீர் வந்ததால் தற்போது சிட்ரபாக்கம் பகுதியில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் இருபுறமும் சேதமடைந்து விட்டது. தற்போது, கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டதால் சேதமடைந்த கால்வாய் பணிகளையும், சீரமைப்பு பணிகளையும், கால்வாயில் சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கும் பணிகளையும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Krishna Canal ,Uthukkota , Damaged Krishna Canal near Oothukottai: Urgent for immediate repairs
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு