சென்னை மண்டலத்தில் கோயில் பணியாளர் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கோயில் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை, கந்தக்கோட்டம், கந்தசுவாமி கோயிலில் சென்னை மண்டலத்தில் உள்ள அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் மற்றும் கோயில் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் சென்னை மண்டல இணை ஆணையர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, குடியிருப்பு வசதி போன்ற கோரிக்கைளை முன்வைத்தனர். இவர்களின் கோரிக்கைகள் விதிமுறைகளுக்குட்பட்டு பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: