எஸ்பிஐ வங்கியின் சார்பில் விஷ்ணுவாக்கத்தில் ரூ.78 லட்சம் மதிப்பில் வேளாண் திட்ட கடன் உதவிகள்

திருவள்ளூர்: வேளாண் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 23 கிராமங்களில் இரவு நேர முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிபி திருவள்ளூர் கிளை சார்பாக திருவள்ளூர் தாலுகா, பேரத்தூர் ஊராட்சி, விஷ்ணுவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நேர முகாம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டத்தின் பொது மேலாளர் தெபாசிஷ் மிஷ்ரா தலைமை தாங்கினார். அம்பத்தூர் மண்டல மேலாளர் ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ரூ. 78 லட்சம் மதிப்பில் பல்வேறு வேளாண் திட்ட கடன் உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் அலுவலர்கள் மற்றும் பல்வேறு தமிழக அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: