×

வெ.இண்டீசுக்கு எதிரான ஒருநாள்; இந்தியாவுக்கு 12வது தொடர் வெற்றி: அக்சர் அதிரடி

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீசில் நடக்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக  வெ.இண்டீஸ், கடைசி பந்து வரை போராடி தோற்றது. அதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதலில் களம் கண்ட வெ.இண்டீஸ்  50ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 311ரன் குவித்தது.  அந்த அணியின் ஷாய் ஹோப் 115(8பவுண்டரி, 3சிக்சர்),  கேப்டன் நிகோலஸ் பூரன் 74(1பவுண்டரி, 6சிக்சர்)  விளாசினர். இந்தியா தரப்பில் ஷர்துல் 3 விக்கெட் எடுத்தார்.

கடின இலக்கை விரட்ட களமிறங்கிய இந்தியாவின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.  ஆனால் ஆட்ட நாயகன் அக்சர் ஆட்டமிழக்காமல் 64 (35பந்து, 3பவுண்டரி, 5சிக்சர்), ஸ்ரேயாஸ் 63 (4 பவுண்டரி, 1 சிக்சர்),  சஞ்சு சாம்சன் 54 (3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷூப்மன் கில் 43 ரன் (5 பவுண்டரி) குவிக்க,  இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணி  49.4ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 312ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்  வென்றது. வெ.இண்டீஸ் தரப்பில்  அல்சாரி, கேல் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில்  இந்தியா கைப்பற்றியது. அது மட்டுமல்ல வெ.இண்டீசுக்கு எதிராக  ஒருநாள் தொடர்களில் 2007ம் ஆண்டு முதல் இந்தியா பெறும் 12வது தொடர் வெற்றி இது. அதன் மூலம் ஒரு
நாட்டுக்கு எதிரான தொடர்களில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள்  ஆட்டம் நாளை நடக்கிறது.

Tags : West Indies ,India ,Aksar , ODI vs West Indies; 12th series win for India: Aksar action
× RELATED சில்லி பாயின்ட்…