×

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பதை எதிர்த்து மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை இணைப்பதை அனுமதிக்கும் தேர்தல் சட்டங்கள் 2021ஐ ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘நீங்கள் ஏன் இந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தால் மாறுபட்ட விதமாக இந்த வழக்கு அணுகப்படும். அதனால் மனுதாரர் டெல்லி உயர்நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்’’ என நீதிபதிகள் தெரிவித்தார்.

Tags : Supreme Court , Petition against linking Aadhaar-Voter Card: Supreme Court refuses to hear
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...