இளம் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர் மற்றும் கலைக்குழுக்கள் விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள், இம்மாதம் 31ம் தேதியில் 16வயது நிரம்பியராகவும் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்கும் கர்நாடக இசையில் குரலிசை, கருவியிசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள், 31ம் தேதியில் 18வயது முதல் 32 வயதுக்குட்பட்ட கிராமிய கலைஞர்கள்,மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்க நபர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கலை நிறுவனங்கள் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர், உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றம், 31, பொன்னி, பிஎஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600028 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 044-24937471 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: