நீ பத்துன்னா... நான் பதினைஞ்சு... எடப்பாடி ஏட்டிக்குபோட்டி நீக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், கழக விவசாயி பிரிவு துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், புரட்சித் தலைவி பேரவை இணைச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச்செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் முகம்மது அலி ஜின்னா, விவசாயப் பிரிவு துணைச்செயலாளர் பாரதியார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவா, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் ஆம்னி பஸ் அண்ணாதுரை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் ராஜ்மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச்செயலாளர் ராமசந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் மணவை ஜெ.ஸ்ரீதரன் ராவ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல இணைச்செயலாளர் சுஜைனி, தகவல் தொழில் நுட்ப பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர்கள் விஜய் பாரத் மற்றும் மோகனப்பிரியா, அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவு பொருளாளர் மோகன் ஆகிய 15 பேர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: