பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை ரூ.2.50 லட்சமாக உயர்வு

சென்னை: பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகையை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை வருமாறு:  பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து 2020 ஏப்ரல் 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக நடப்பு நிதியாண்டு முதல் உயர்த்தப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து 2020ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இந்த ஆணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

Related Stories: