×

தலைமைச்செயலக காலனி மற்றும் மீன்பிடிதுறைமுகம் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 நபர்கள் கைது

சென்னை: தலைமைச்செயலக காலனி மற்றும் மீன்பிடிதுறைமுகம் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் 3.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, G-5 தலைமைச்செயலக காலனி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (25.07.2022) SVM நகர், மூலிகை பார்க் அருகே கண்காணித்தபோது, அங்கு இரண்டு நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.கார்த்திக் (எ) சொட்ட கார்த்திக், வ/24, த/பெ.பாண்டியன், 3வது தெரு, ஓட்டேரி, சென்னை, 2.கார்த்திக், வ/28, த/பெ.சீதாராமன், எண்.208, S.S.புரம், புரசைவாக்கம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.4 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும்  விசாரணையில் கார்த்திக் (எ) சொட்ட கார்த்திக் G-1  வேப்பேரி காவல் நிலைய சரித்திரிப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். இதே போல, N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (24.07.2022) பவர்குப்பம், சுரங்கப்பாதை அருகில் கண்காணித்து கஞ்சா பதுக்கி வைத்திருந்த 1.இம்தாதுல் உசேன், வ/24, த/பெ.சித்திக்மியா, திரிபுரா மாநிலம் 2.ரூபல் உசேன், வ/19, த/பெ.ஆருண்மியா, திரிபுரா மாநிலம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.07.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Leadership ,Colony ,Fisherport , 4 persons were arrested for illegally selling ganja in Chief Secretariat Colony and Fishing Port areas
× RELATED திண்டுக்கல் அருகே ஆசிரியையிடம் செயின் பறிப்பு