முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்ட தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளின் சம்மதம் தேவை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட இரு மாநில அரசுகளின் அனுமதி அவசியம் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஜான் பிரிட்டார்ஸ் என்ற கேரள மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா அரசுகளின் சம்மதம் தேவை என கூறியுள்ளனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழ்நாடு அரசின் சம்மதம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்டுவது என முக்கிய முடிவு ஏதேனும் எடுக்கப்பட்டால் 2014ம் ஆண்டு முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளுடைய ஒருமித்த கருத்து அல்லது சம்மதம் தேவை என்ற விஷயம் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு பதில் அளித்தது. முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Related Stories: