×

அரசு விதை பண்ணையில் 14 ஏக்கரில் தக்கைப்பூண்டு சாகுபடி-விதைச்சான்று அதிகாரி ஆய்வு

திருத்துறைப்பூண்டி : நெடும்பலம் அரசு விதை பண்ணையில் நடைபெற்றுள்ள 14 ஏக்கர் தக்கைப்பூண்டு சாகுபடியை விதைச்சான்று உதவி இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் சுமார் 55 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் நெல்ரகங்கள் விதைக்கு பயன்படுத்தப்படும். இந்த பண்ணையில் கடந்த ஆண்டு 15 ஏக்கர் இயற்கை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டு வயலில் தக்கைப்பூண்டு உற்பத்தி செய்து வளர்ந்த பிறகு, அதை பசுந்தாள்உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு சுமார் 14 ஏக்கரில் தக்கைப் பூண்டு உற்பத்தி செய்து, தற்போது நன்கு வளர்ந்து உள்ளது. இந்த தக்கைப்பூண்டில் இருந்து விதை எடுத்த பிறகு டிராக்டர் மூலம் உழுது இயற்கையான பசுந்தாள் உரமாகபயன்படுத்தப்பட்டு, அதன் சாகுபடி செய்யப்பட உள்ளது. தக்கைப்பூண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை திருவாரூர் விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆய்வு மேற்க்கொண்டார்.ஆய்வின்போது விதை சான்று அலுவலர் திருப்பதி, வேளாண்மை அலுவலர்கள் செந்தில், பாஸ்கர், உதவி வேளாண்மை அலுவலர் பிரசன்னா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Seed , Tiruthurapoondi: Assistant Director of Seed Certification of 14 acres of thakkaiboondi cultivation at Nedumbalam Government Seed Farm.
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு