×

2-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து திரில் வெற்றியை தந்த இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஜோடி சிறப்பான சிறப்பான தொடக்கம் தந்து, அணிக்கு வலுவான அடிதளம் உருவாக்கியவர்கள், முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேகரித்தனர். மேயஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷமார் புரூக்ஸ் 35 ரன்களும், பிரான்டன் கிங் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் நிகோலஸ் பூரன் கைகோர்த்து அணியை வலுவான நிலைக்கு பயணிக்க வைத்தனர்.

நிகோலஸ் பூரன் 77 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் 100-வது ஒருநாள் ஆடிய ஷாய் ஹோப் 13-வது சதத்தை நிறைவு செய்தார். ஷாய் ஹோப் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 115 ரன்களை நொறுக்கினார். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஒவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தவான் 13 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். சுப்மன் கில் 43, ஸ்ரேயாஸ் 63, சஞ்சு சாம்சன் 54, தீபக் ஹூடா 33 ரன்கள் சேர்த்து வெளியேறியதும், விஸ்வரூபம் எடுத்த அக்‌ஷர் பட்டேல் இந்திய அணிக்கு கதாநாயகனாக ஜொலித்தார்.

அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டவர், முதல் அரை சதத்தை பதிவு செய்தவுடன், அணியை வெற்றி பாதைக்கும் அழைத்துச் சென்றார். 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்‌ஷர் பட்டேல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார். அக்‌ஷர் பட்டேல் 35 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 64 ரன் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிகணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

Tags : India ,West Indies , West Indies, victory, Indian team, progress
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...